சேலம் சீலநாயக்கன்பட்டி முதல் உளுந்தூர்பேட்டை பைபாஸ் சாலையை ஒட்டி சீலநாயக்கன்பட்டியில் இருந்து குமரகிரிப்பேட்டை வரை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 பக்கமும் பைபாஸ் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த சாலையில் இதுவரை மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே விபத்துகள் நடக்கும் முன் இங்கு மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கருணாநிதி, எருமாபாளையம், சேலம்.