தர்மபுரி மாவட்டம் மானியதஅள்ளி ஊராட்சி தொப்பூர் வனப்பகுதியில் கட்டமேடு உள்ளது. இந்த கட்டமேடு பகுதி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து கீழ்பூரிக்கல் மற்றும் ஜருகு உள்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையாகும். இந்த சாலையில் சுமார் 1 கி.மீ. தூரம் மின் விளக்குகள் பழுதாகி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலை இருளில் மூழ்கியுள்ளது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள், மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை எரிய செய்ய வேண்டும்.
-குமார், தொப்பூர், தர்மபுரி.