கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காரகுப்பம் சாலையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி அருகில் சாலையில் மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இந்த சாலையில் செல்லும் பஸ்கள் மற்றும் லாரிகள் மின்கம்பிகளை உரசும் வகையில் உள்ளதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகளை சரி செய்ய மின்சார துறை நடவடிக்கை எடுக்கப்படுமா?
-ரவி, பர்கூர், கிருஷ்ணகிரி.