தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் அண்ணா நகரில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு குடிநீர் வழங்கும் மின் மோட்டார் அதிக மின் அழுத்தம் காரணமாக எரிந்து வீணானது. இதனால் தண்ணீர் வழங்க முடியாமல் ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய மின்மோட்டார் அமைத்து மாணவ- மாணவிகளுக்கு உதவ வேண்டும்.
-தங்கராஜ், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.