விழுந்தமாவடி, வேட்டைகாரணிருப்பு, வெள்ளப்பள்ளம், கோவில்பத்து, நாலுவேதபதி ஆகிய கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி தினமும் 5 மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடைபெறுவதால் படிக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அறிவிப்பு இன்றி மின்தடை ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,நாகை