எரியாத மின்விளக்கு

Update: 2022-09-26 16:04 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா கொட்டுமாரனஅள்ளி கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக மின்விளக்கு எரியவில்லை. இதனால் அப்பகுதியில் திருட்டு வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் இரவில் விஷ பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மின்விளக்குகளை எரியசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனி, தர்மபுரி.

மேலும் செய்திகள்