தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீதிகானஅள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் விழுந்து இரும்பு கம்பிகள் தெரிந்தபடி உள்ளன. வேகமாக காற்று அடித்தால் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து மின் கம்பம்த்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும்.
-பொதுமக்கள், சீதிகானஅள்ளி, தர்மபுரி.