எலும்புக்கூடான மின்கம்பம்

Update: 2022-09-25 16:21 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியம் ஒப்பதவாடி ஊராட்சி வேடியப்பன் நகர் செல்லும் சாலையோரம் உள்ள மின்கம்பம் ஒன்று துறுப்பிடித்து விழும் நிலையில் காணப்படுகிறது. அந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சிகள் பெயர்ந்து விழுந்தும், இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தபடியும் எலும்புகூடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக மின்கம்பத்தை கடந்தும் செல்லும் மக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இந்த மின்கம்பத்தினை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

-பூங்கொடி, ஒப்பதவாடி, கிருஷ்ணகிரி. 

மேலும் செய்திகள்