ஆபத்தான நிலையில் மின்கம்பம்

Update: 2022-09-24 12:16 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சாலையில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. குறிப்பாக மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புகம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அந்த பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்