ஆம்புலன்ஸ் வசதி வேண்டும்

Update: 2022-09-23 15:26 GMT


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் பேரூராட்சியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை ஆறு மாத காலமாக இல்லை . இதனால் சுற்று வட்டார கிராம மக்கள் ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் அவசர சிகிச்சைக்கு செல்ல காலதாமதம் ஆகிறது. இதனால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் வசதியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பாபநாசம்

மேலும் செய்திகள்