ஏரியூர் அருகே ஈச்சப்பாடி பகுதியில் மின்கம்பங்களில் விளக்குகள் எரிவதில்லை என, பொதுமக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு ஊராட்சி மன்ற நிர்வாகத்தால் மின்கம்பங்களில் இருந்து தெருவிளக்குகள் சரி செய்வதற்காக எடுத்து செல்லப்பட்டது. ஒரு ஆண்டு ஆகியும் மின்கம்பம் மட்டுமே உள்ளது. அதில் இருந்து எடுத்து செல்லப்பட்ட மின்விளக்குகள் பொருத்தாததால் இப்பகுதி வீதிகளில் இருள் சூழ்ந்து இருப்பதால் இரவு நேரங்களில் விஷ பூச்சிகளின் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
-அர்ஜூன், தர்மபுரி.