தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-09-20 11:56 GMT

கோவை மதுக்கரை நகராட்சிக்கு உள்பட்ட மேட்டாங்காடு பகுதியில் அங்கன் வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் பின்புற பகுதியில் மின்கம்பிகள் அனைத்தும் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக வரும் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அனைத்து மின்கம்பியில் உரசி செல்கிறது. மேலும் சிறுவர்கள் கையால் பிடிக்கும் தூரத்தில் மின்கம்பிகள் உள்ளதால் பெரும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பிகளை சீரமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்