கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் தமிழக, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் வகையில் மூன்று சாலைகள் பிரியும் குப்பம் ஜங்சனில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின்விளக்கு 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருப்பதால் மின்சாரம் வீணாகிறது. பகல் நேரமும் தொடர்ந்து மின் விளக்கு எரிகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தனிக்கவனம் செலுத்தி இரவு நேரத்தில் மட்டும் மின்விளக்கு எரிய செய்ய வேண்டும்.
-சதிஷ், கிருஷ்ணகிரி.