மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு ஊராட்சியில் உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த மின்விளக்கு சரிவர எரிவதில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.