நாமக்கலில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது வகுரம்பட்டி பிரிவு சாலை. இங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் சிங்கிலிபட்டி கிராமம் உள்ளது. இங்கு 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் மின் விளக்குகள் இல்லாததால் மாலை நேரங்களில் பஸ் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் திருட்டு அச்சமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பார்களா ?
-விஜயன், சிங்கிலிபட்டி, நாமக்கல்.