விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா முத்துசாமிபுரத்தில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. ஆபத்தான இந்த மின்கம்பமானது அருகில் உள்ள வீட்டின் மீது விழும்படி சாய்ந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த மின்கம்பத்தை விரைவாக மாற்றியமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.