ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் 10- வது வார்டு பகுதியில் உள்ள தெருவிளக்குகள் சில நாட்களாக எரியவில்லை. இதனால் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.