தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி நான்கு ரோடு அருகே பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடத்தில் பஞ்சப்பள்ளி சாலையோரம் இரும்பு மின் கம்பம் உள்ளது. அந்த மின் கம்பம் துருப்பிடித்து பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வேகமாக காற்று அடித்தால் கூட எந்த நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாய் முரளி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.