உடன்குடி அருகே பரமன்குறிச்சியை அடுத்த குருநாதபுரத்தில் மின்மாற்றி பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு மின்வினியோகம் செய்யப்படாததால், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. எனவே, மின்மாற்றியின் பழுதை சரி செய்து, விவசாய நிலங்களுக்கு சீராக மின்வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.