நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து வலையபட்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் கியாஸ் குடோன், அருகே செல்லும் மின்சார கம்பி அங்கு உள்ள புளிய மரக்கிளைகளுக்கு இடையே செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பச்சை மரங்களில் மின்சாரம் சுலபமாக பாயும் வாய்ப்பு உள்ளது. அந்த பகுதியில் ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் மேயும் பகுதியாகவும், பொது மக்களும் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜராஜன், மோகனூர், நாமக்கல்