திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதி சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இத்தகைய போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் போதுமான மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இருளை பயன்படுத்தி மர்மநபர்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் வழிப்பறியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் தேவையான இடங்களில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?