விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கீழபொட்டல்பட்டி கிராமத்தில் கடந்த சிலநாட்களாக தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் இரவுநேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் எரியாத தெருவிளக்குகளை அகற்றி புதிய விளக்குகள் அமைக்க வேண்டும்.