தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்
மயிலாடுதுறை மாவட்டம், மணல் மேடு பேரூராட்சியில் வெள்ளாளர் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் மின் கம்பிகள் அருகில் உள்ள மரத்தின் கிளைகளில் உரசி தீ விபத்து ஏற்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் சென்றால் மின்கம்பிகளில் உரசும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை, சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மணல்மேடு.