மின்விளக்கு வசதி வேண்டும்

Update: 2022-09-09 14:28 GMT

திருவாரூர்-நாகை சாலை மரண பாலத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை உள்ள பிரதான தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்கு வசதியில்லை. இதன்காரணமாக இரவுநேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் நடந்து செல்பவர்கள், குறிப்பாக பெண்கள், மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இருள் சூழ்ந்து கிடப்பதால் மேற்கண்ட பகுதியில் மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பார்களா

மேலும் செய்திகள்