நாகை முதலாவது கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதன்காரணமாக இரவுநேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இருள் சூழ்ந்து கிடப்பதால் மேற்கண்ட பகுதியில் மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகை முதலாவது கடற்கரை சாலையில் உள்ள மின்விளக்குகள் முறையாக ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?