தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட அருமநல்லூர் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகளுக்கான மின் இணைப்பு பெட்டி அங்குள்ள ஒரு கம்பத்தில் மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டு திறந்து கிடக்கிறது. சிறுவர்கள் தொட்டுவிடம் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டியை மின்கம்பத்தில் உயரமான இடத்தில் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-என்.குமார், அருமநல்லூர்.