திருவாரூர் மாவட்டம் பழையவலம் கிராமம் மேலத்தெருவில் செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக மரக்கிளைகள் மீது உரசி செல்கின்றன. இதனால் காற்றடிக்கும் நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.