ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-09-07 12:35 GMT


நாகை மாவட்டம் திருமருகல்  சந்தைப்பேட்டை கடை தெருவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள ஒரு மின்கம்பத்தில்  சிமெண்டு காரைகள் முழுவதும் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.எந்நேரத்திலும் சாய்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருமருகல்

மேலும் செய்திகள்