மின்கம்பம் மாற்றப்பட்டது

Update: 2022-09-07 06:19 GMT

தாழக்குடி ேபரூராட்சியில் மீனமங்கலத்தில் இருந்து வெள்ளமடம் ஆத்தங்கரைக்கு செல்லும் சாலையில் சந்தைவிளை புதிய பாலம் அருகில் ஒரு மின்கம்பத்தின் மேல் பகுதி சேதமடைந்து காணப்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நட்டனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-டி.எஸ்.சிதம்பரதாணு, தாழக்குடி.

மேலும் செய்திகள்