மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள மின்விளக்குகள் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் சாலையின் இருபுறங்களிலும் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இவற்றில் மறைந்து இருந்து மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபடும் சூழல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி சாலையில் உள்ள மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?