ஆபத்தான மின்கம்பம்
தஞ்சை மணிமண்டபம் அருகே வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்திற்கு அருகே உள்ள மின் கம்பம் சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு வரும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். தற்போது காற்றும் அதிகமாக வீசுவதால் எந்தநேரமும் மின் கம்பம் விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்பழகன், தஞ்சாவூர்