மின்விளக்கு ஒளிருமா?

Update: 2022-09-05 11:02 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூா் தாலுகா தேவூர் காந்தி தெரு முகப்பு பகுதியில் மின்விளக்கு ஒன்று உள்ளது. இது முறையான பராமரிப்பில்லாத காரணத்தால் கடந்த சில வாரங்களாக சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர் . எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்கு ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?





மேலும் செய்திகள்