தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-09-03 12:09 GMT
 மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் செல்லும் மின்கம்பிகள் கைக்கு எட்டும் தூரத்தில் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதன்காரணமாக விவசாய தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடன் வயலில் பணிகளை மேற்கொள்கின்றன. அதுமட்டுமின்றி அறுவடை எந்திரங்கள் வயலுக்குள் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய பணிகள் பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்