சேலம் சின்ன சீரகாபாடியை அடுத்த தனியார் மருத்துவ கல்லூரி அமைந்துள்ள பகுதியில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அந்த சாலையில் வரிசையாக விளக்குகள் அமைக்கப்பட்டு ஒளிர்ந்து கொண்டு இருந்தன. தற்போது அந்த விளக்குகள் பழுதடைந்ததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எதிர்பாராத நேரத்தில் சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இதுபற்றி புகார் அளித்தும் பலன் இல்லை. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து விளக்குகளை சரி செய்து ஒளிர செய்ய வேண்டும்.