கிருஷ்ணகிரி மாவட்டம் பெலவர்த்தி பஞ்சாயத்து நாகமரத்துப்பள்ளம் பஸ் நிறுத்தத்தில் பல வருடங்களாக மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் பஸ் நிறுத்தத்திற்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பஸ் நிறுத்தத்தில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.
-திருப்பதி, நாகமரத்துப்பள்ளம், கிருஷ்ணகிரி.