நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் ஊராட்சி மேல தெருவில் மின் விளக்குள் எரியவில்லை. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்திருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். இருட்டாக இருப்பதால் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்கு எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,மருங்கூர்.
-----------------------------