கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட சுண்ணாபட்டி கிராமத்தில் தெருக்களில் கடந்த 10 நாட்களாக தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவில் வெளியே செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் தெரு விளக்குகளை உடனடியாக எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.