மின் விளக்கு வசதி வேண்டும்

Update: 2022-08-27 14:04 GMT


நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் ஊராட்சி மேலதெரு முதல் ஆற்றங்கரை வரை மின் விளக்குகள் இல்லை. இதனால் ,இரவில் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது, இருள் சூழ்ந்து இருப்பதால் அந்த பகுதியில் வழிப்பறி நடக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மருங்கூர்

மேலும் செய்திகள்