மின் விளக்கு வசதி வேண்டும்

Update: 2022-08-26 14:00 GMT


நாகை மாவட்டம் திட்டச்சேரியிலிருந்து தேவங்குடி வழியே குத்தாலம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மின்விளக்குகள் இல்லாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இருட்டில் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். இருட்டாக இருப்பதால் சமூக விரோதிகள் வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள் எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில்  மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் ,திட்டச்சேரி.

மேலும் செய்திகள்