அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட அய்யனார் கோவில் வீதியில் உயர் மின்னழுத்தம் செல்லும் பாதையில் 2 மின் கம்பங்கள் ஆபத்தான நிலையில் இப்ப விழுமோ எப்ப விழுமோ என்ற நிலையில் உள்ளது. அப்பகுதியில் குடியிருப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக உள்ளதால் அவ்வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் மின்கம்பத்தை மாற்ற மின்சார வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்படும் முன் மின் கம்பங்களை மாற்றி பொதுமக்களின் விலைமதிப்பற்ற உயிரை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மின்சாரவாரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.