மின்சாரம் தாக்கும் அபாயம்

Update: 2022-07-09 11:08 GMT

கோவை கணேசபுரம் சுப்பையா கவுண்டர் வீதியில் மின்கம்பத்தின் பக்கவாட்டில் மின் பெட்டி பொருத்தப்பட்டு உள்ளது. அந்த பெட்டியில் இணைக்கப்பட்டு இருக்கும் மின் ஒயர்கள் சேதமடைந்து, வெளியே தொங்கி கொண்டு இருக்கின்றன. அந்த சேதமடைந்த ஒயர்களில் மின்கசிவு ஏற்படுகிறது. அதை யாராவது தெரியாமல் தொட்டாலோ அல்லது அந்த வழியாக செல்பவர்கள் மீது உரசினாலோ மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்