தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-08-24 14:51 GMT


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எடுத்துக்கட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எ.சாத்தனூர் கிராமத்தில் மேலத்தெரு, சிவன் கோவில் பகுதி, வடக்குத்தெரு பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. இதன்காரணமாக மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த பகுதியின் வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பொது மக்கள், எடுத்துக்கட்டி.

மேலும் செய்திகள்