நடைபாதையில் இடையூறாக உள்ள மின்கம்பம்

Update: 2022-08-22 14:41 GMT
தஞ்சை புதுஆற்றங்கரை சாலையோரத்தில் மாமன்னர் ராஜராஜசோழன் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நடைபயணம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் நடைபாதையின் நடுப்பகுதியில் மின்கம்பம் நடந்து செல்பவர்களுக்கு இடையூறாக உள்ளது. இதன்காரணமாக நடைபாதையை பயன்படுத்துபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைபாதையில் இடையூறாக உள்ள மின்கம்பத்தை வேறு இடத்தில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்