திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தச்சம்பட்டு, இங்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளனர். ஒருசிலர் கட்டிடங்களை கட்டி வருகிறார்கள். பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற முன்வர வேண்டும்.
சிவா, தச்சம்பட்டு