Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 July 2022 12:10 PM GMT
| நாகர்கோவில்
#1675

மின்கம்பத்தை மாற்ற வேண்டும்

மின்கம்பத்தை மாற்ற வேண்டும்மின்சாரம்

கோட்டாரில் இருந்து பீச்ரோடு செல்லும் பிரதான சாலையில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் அருகில் உள்ள மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சாலையில் சரிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்டு அதிகாரிகள் சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.எஸ்.ராஜன், வைத்தியநாதபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 11:49 AM GMT
| நாகர்கோவில்
#1672

பழுதான குடிநீர் எந்திரம்

பழுதான குடிநீர் எந்திரம்தண்ணீர்

நாகர்கோவில் வடசேரியில் பஸ்நிலையம் உள்ளது. இந்த பஸ்நிலையத்தில் இருந்து குமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால், தினமும் ஆயிரக்காணக்கான பயணிகள் பஸ்நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். இந்த பஸ்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழக்கும் எந்திரம் பழுதடைந்து பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால், பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த எந்திரத்தை அகற்றி விட்டு புதிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 11:25 AM GMT
| நாமக்கல்
#1664

தடுப்புச்சுவரால் விபத்து

சாலை

நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம். ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவை உள்ளன. அங்கு சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருக்கும் தடுப்பு சுவரின் உயரம் அதிகமாக உள்ளது. அதனால் கலெக்டர் அலுவலகம் மற்றும் கோர்ட்டு வளாகத்தில் இருந்து எதிர் திசை சாலையின் ஓரத்தில் உள்ள கடைகளுக்கு செல்பவர்கள் சாலையை கடக்கும் போது, அந்த வழியாக வரும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை. அதன் காரணமாக சாலையைக் கடப்பவர்கள் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கி காயம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 11:12 AM GMT
| சேலம்-வடக்கு
#1662

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

மற்றவை

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் எதிரே உள்ள மேம்பாலம் வழியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் பலர் சென்று வருகின்றனர். அவர்கள் காந்தி மைதானம் எதிரே உள்ள படிக்கட்டு மூலம் ஏறி மேம்பாலத்துக்கு செல்கின்றனர். ஆனால் அந்த படிக்கட்டை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும் அங்கு இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் அந்த வழியாக செல்ல பெண்கள் தயங்குகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் படிக்கட்டை சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்றி கூடுதலாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 10:35 AM GMT
| கீழ்வேளூர்
#1658

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்தண்ணீர்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் ஓடாச்சேரியில் இருந்து நாகை நகராட்சிக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீர் வீணாக வெளியேறி வயல்வெளிகளில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 10:33 AM GMT
| நாகப்பட்டினம்
#1657

சமுதாயகூடம் சீரமைக்கப்படுமா?

சமுதாயகூடம் சீரமைக்கப்படுமா?பூங்கா

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்களின் நலன் கருதி சமுதாய கூடம் ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த சமுதாய கூடம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு, சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. அதுமட்டுமின்றி கட்டிடத்தை சுற்றி செடி,கொடிகள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் சமுதாயகூட கட்டிடம் விஷப்பூச்சிகளின் கூடாரமாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 10:23 AM GMT
| சேலம்-தெற்கு
#1656

ஆஸ்பத்திரி முன்பு சுகாதார சீர்கேடு

ஆஸ்பத்திரி முன்பு சுகாதார சீர்கேடுகுப்பை

சேலம் மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட கிச்சிப்பாளையம் பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு 3 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் அங்குள்ள டிரான்ஸ்பார்மர் அருகே கால்நடைகளையும் சிலர் கட்டி வைத்துள்ளனர். இதனால் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் நோயாளிகள் முகம் சுளித்தவாறு செல்வதை காண முடிகிறது. எனவே கிச்சிப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உள்ள...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 7:51 AM GMT
| நாமக்கல்
#1645

சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம்

சாலை

நாமக்கல் நகராட்சி சுண்ணாம்புகாரத்தெரு பிரிவு சாலையிலும், மஜித் தெருவில் இருந்து குட்டை தெருவுக்கு பிரியும் சாலையிலும் கான்கிரீட் மூலம் தரைவழி மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் குட்டைத்தெரு பிரிவில் இருந்து மஜித் தெரு பிரியும் இடத்தில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 8:52 AM GMT
| நாகர்கோவில்
#1643

எரியாத மின்விளக்குகள்

எரியாத மின்விளக்குகள்மின்சாரம்

எரியாத மின்விளக்குகள் நாகர்கோவில் கோட்டாரில் சவேரியார் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் சந்திப்பு வரை குழாய்கள் பதிப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது, சாலை சீரமைக்கப்படாவிட்டாலும் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் பல மின்கம்பங்களில் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 4:20 PM GMT
| மதுரை மத்தி
#1585

சுகாதார சீர்கேடு

மற்றவை

மதுரை மாவட்டம் கீழமாசி வீதி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அருகில் பொதுமக்கள் பயன்படுத்த சரியான கழிப்பறை வசதி இல்லை. இதனால் இங்கே வரும் பொதுமக்கள் திறந்த வெளியில் செல்லும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் பொது கழிப்பறை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 4:20 PM GMT
| விருதுநகர்
#1584

தேங்கிநிற்கும் கழிவுநீர்

கழிவுநீர்

விருதுநகர் மாவட்டம் ரயில்வே பீடர் ரோடு நகராட்சி சுகாதார அலுவலகம் அருகே பல வாரங்களாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி முழுவதும் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறிவிட்டது. இந்த கொசுக்களால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 11:15 AM GMT
| மதுரை தெற்கு
#1484

பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா கே.பரமன்பட்டியில் இருந்து திருமங்கலத்திற்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick