Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Aug 2022 12:17 PM GMT
Thiru | இராமநாதபுரம்
#5651

போக்குவரத்துக்கு பயனற்ற சாலை

சாலை

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மேலச்செல்வனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தேரங்குளம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.இந்த கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்குமுன் அமைக்கப்பட்ட சாலை தற்போது முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களும் வர சிரமப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 11:51 AM GMT
Thiru | இராமநாதபுரம்
#5642

பஸ் நிறுத்தத்தில் பள்ளம்

சாலை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பஸ் நிறுத்தத்திற்கு உள்ளே வரும் நுழைவுவாயிலில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் இந்த பஸ் நிறுத்தத்திற்கு வரும் பஸ்கள், வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். பள்ளத்தில் விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். பெரும்விபத்து ஏற்படும்முன் அதிகாரிகள் இந்த பள்ளத்தை மூட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 2:19 PM GMT
Thiru | இராமநாதபுரம்
#3262

பராமரிப்பற்ற பூங்கா

மற்றவை

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் பகுதியில் உள்ள அம்மா பூங்காவில் ஏராளமான நாணல் செடி மற்றும் புற்கள் வளர்ந்தும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. உடனடியாக இந்த பூங்காவில் உள்ள உபகரணங்களை சரி செய்து நாணல் செடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 2:18 PM GMT
Thiru | இராமநாதபுரம்
#3261

பாெதுமக்கள் அவதி

தண்ணீர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்களில் பல ஆண்டுகளாக மக்கள் குடிதண்ணீருக்காக தள்ளுவண்டியில் குடங்களுடன் அலைந்து எடுக்கும் நிலைதான் இருந்து வருகின்றது. ஆர்.எஸ். மங்கலம் அருகே சோழந்தூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள களக்குடி பகுதியில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் குழாயில் இருசக்கர வாகனத்தில் சென்று தள்ளு வண்டியில் குடங்களுடன் தண்ணீர் எடுத்து வரும் நிலை நீடிக்கிறது.மக்களின் குடிநீர் பிரச்சினையை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 1:29 PM GMT
Thiru | சிவகங்கை
#3233

நடவடிக்கை எடுப்பார்களா?

மற்றவை

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம், செட்டிகுறிச்சி கிராமத்தில் உள்ள பொது மயானத்திற்கு செல்லும் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்தும், மின்சார கம்பிகள் தாழ்வான நிலையிலும் உள்ளது. இதன் காரணமாக இறந்தவர்களை இதன் வழியே கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 5:16 PM GMT
Thiru | மதுரை
#3090

கால்நடைகள் தொல்லை

கால்நடைகள் தொல்லைசாலை

மதுரை மாவட்டம் பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள சாலைகளில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. சாலையில் நடமாடும் கால்நடைகளால் பஸ்களை இயக்க ஓட்டுனர்களுக்கு இடையூறாக உள்ளது. இதனை தவிர்க்க மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 11:25 AM GMT
Thiru | இராமநாதபுரம்
#2553

வழிகாட்டி பலகைகள் அமைக்கப்படுமா?

போக்குவரத்து

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகில் நெடுஞ்சாலை துறையால் சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. அந்நேரத்தில் ரோட்டின் இருந்த அனைத்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் திருப்புல்லாணி காவல் சோதனை சாவடிக்கு சொந்தமான பெயர் பலகைகளும், எச்சரிக்கை பலகைகளும் அப்புறப்படுத்தப்பட்டு ஓரமாக வைக்கப்பட்டது. பணி முடிந்த நிலையில் இந்த வழிகாட்டி பலகைகள், எச்சரிக்கை பலகைகள் நிறுவப்படாமல் உள்ளன. பெயர் பலகை இல்லாத காரணத்தால் வேண்டிய ஊர்களுக்கு செல்ல வழி தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். அவசர...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 12:51 PM GMT
Thiru | மதுரை
#2403

காற்று மாசுபாடு

காற்று மாசுபாடுகுப்பை

மதுரை அலங்காநல்லூர் சாலையில் சிக்கந்தர் சாவடி வணிக வளாகம் எதிரே உள்ள காலி நிலத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. அவ்வப்போது இந்த குப்பைகளை எரித்து விடுவதால், அப்பகுதியே புகை சூழ்ந்து சுகாதார கேடும், காற்று மாசுபாடும் அடைந்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சுவாச பிரச்சினை, மூச்சுதிணறல் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 11:43 AM GMT
Thiru | விருதுநகர்
#2035

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சேத்தூர் பேரூராட்சி 17-வது வார்டு ஜீவாநகரில் உள்ள பள்ளிவாசல் அருகே பல தெருக்களில் இருந்து வரும் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதி மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் முறையான வாருகால் அமைத்து கழிவுநீர் தேங்குவதை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 10:56 AM GMT
Thiru | இராமநாதபுரம்
#2017

அடிக்கடி ஏற்படும் மின்தடை

மின்சாரம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட திருப்பாலைக்குடி, பழங்கோட்ைட, மாரியம்மன் கோவில், காந்திநகர் ஆகிய பகுதிகளில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கடந்த சில நாட்களாக இரவு பகலாக மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இந்த மின்தடையால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள் கொசுக்கடியால் அவதியடைந்து வருகின்றனர். எனவே அடிக்கடி மின்தடை ஏற்படுவதை சரிசெய்ய மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 10:53 AM GMT
Thiru | இராமநாதபுரம்
#2016

குண்டும், குழியுமான சாலை

சாலை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்- ராமேசுவரம் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலை காந்தி நகர் அருகே சாலை பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் மிகவும் சி்ரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சரி செய்திட நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 10:50 AM GMT
Thiru | இராமநாதபுரம்
#2015

சேதமடைந்த பாலம்

மற்றவை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மீன்பிடி துறைமுக பாலத்தில் கற்கள் பெயர்ந்து பெரிய பள்ளம் விழுந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் அங்கு செல்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பாக சேதமடைந்த இந்த பாலத்தை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick