18 July 2022 12:51 PM GMT
#2403
காற்று மாசுபாடு
அலங்காநல்லூர்
தெரிவித்தவர்: Thiru
மதுரை அலங்காநல்லூர் சாலையில் சிக்கந்தர் சாவடி வணிக வளாகம் எதிரே உள்ள காலி நிலத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. அவ்வப்போது இந்த குப்பைகளை எரித்து விடுவதால், அப்பகுதியே புகை சூழ்ந்து சுகாதார கேடும், காற்று மாசுபாடும் அடைந்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சுவாச பிரச்சினை, மூச்சுதிணறல் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.