19 July 2022 11:25 AM GMT
#2553
வழிகாட்டி பலகைகள் அமைக்கப்படுமா?
திருப்புல்லாணி
தெரிவித்தவர்: Thiru
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகில் நெடுஞ்சாலை துறையால் சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. அந்நேரத்தில் ரோட்டின் இருந்த அனைத்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் திருப்புல்லாணி காவல் சோதனை சாவடிக்கு சொந்தமான பெயர் பலகைகளும், எச்சரிக்கை பலகைகளும் அப்புறப்படுத்தப்பட்டு ஓரமாக வைக்கப்பட்டது. பணி முடிந்த நிலையில் இந்த வழிகாட்டி பலகைகள், எச்சரிக்கை பலகைகள் நிறுவப்படாமல் உள்ளன. பெயர் பலகை இல்லாத காரணத்தால் வேண்டிய ஊர்களுக்கு செல்ல வழி தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். அவசர தேவைக்கு வரும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களும் வரமுடிவதில்லை. அதிகாரிகள் இதனை கவனிப்பார்களா?
அஜித், திருப்புல்லாணி.