Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 Oct 2024 12:06 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#50518

புதர் செடிகள் அகற்றப்படுமா?

மற்றவை

பந்தலூர் அருகே பொன்னானியில் இருந்து அம்மன்காவு வழியாக கொளப்பள்ளிக்கு செல்லும் சாலையோரத்தில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அவை சாலை வரை நீண்டு வளர்ந்து உள்ளதால், அந்த வழியாக நடந்து செல்பவர்கள் அவதிப்படுகிறார்கள். அங்கு விஷ ஜந்துகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. எனவே அந்த புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 12:06 PM GMT
Mr.V.Ramachandran | குன்னூர்
#50517

தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

சாலை

குன்னூர் அருகே அருவங்காடு எம்.ஜி. காலனி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் தடுப்புச்சுவர் எதுவும் கட்டப்படவில்லை. அத்துடன் விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலை பெயர்ந்து விழும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்களும், அப்பகுதியில் குடியிருந்து வருபவர்களும் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த சாலையில் தடுப்புச்சுவர் கட்டி சீரமைப்பு பணியை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 1:13 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#50348

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

கோவை மாநகராட்சி 3-ம் வார்டு அத்திப்பாளையம்-சின்னவேடம்பட்டி மெயின் ரோட்டில் கோதண்டராமர் கோவில் முன்புறம் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த ரோட்டில் தண்ணீர் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சீராக குடிநீர் கிடைப்பதில்லை. இதன்காரணமாக அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அதிகாரிகள், உடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபால், வேடம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 1:12 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#50347

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 12-வது வார்டு உடையாம்பாளையத்தில் இருந்து சின்னவேடம்பட்டி செல்லும் சாலையில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிந்து வருகிறது. இந்த நாய்கள், அந்த வழியாக நடை பயிற்சிக்கு செல்பவர்களை விரட்டுகிறது. மேலும் ஒன்றுக்கொண்டு சண்டையிட்டப்படி 2 சக்கர வாகனங்களில் விழுதுவதால் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன ெசய்வார்களா? ராஜகோபால், உடையாம்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 1:11 PM GMT
Mr.V.Ramachandran | சூலூர்
#50346

விபத்து அபாயம்

சாலை

கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் மேம்பாலத்தின் ஏறுதளத்திலும், இறங்கு தளத்திலும் நிறைய இடங்களில் சாலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக சிமெண்டுகள் பெய்ர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது. இது அந்த வழியாக வரும் வாகனங்களை பதம்பார்க்கிறது. குறிப்பா இரவில் வரும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாக நேரிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க ஆவன செய்ய வேண்டும். செந்தில், வெள்ளலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 1:10 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#50345

இருக்கையில்லா பஸ் நிறுத்தம்

போக்குவரத்து

கோவை சாய்பாபா காலனிஎன்.எஸ்.ஆர். சாலையில் சிவசக்தி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் முழுவதும் விளம்பரங்களால் மறைக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் அமர இருக்க இல்லை. இதனால் பஸ்சுக்காக நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருந்து செல்கின்றனர். அதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.எனவே பஸ் நிறுத்தத்தில் அமர இருக்கை அமைத்திட வேண்டும். அதேபோல விளம்பர பலகைகளை அகற்றி பஸ் நிறுத்தம் தெரியும் படி செய்ய நடவடிக்ைக எடுக்க வேண்டும். ஷாம், சாய்பாபா காலனி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 1:09 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#50344

கழிப்பறை அமைக்கப்படுமா?

மற்றவை

பந்தலூர் அருகே பாட்டவயல் தமிழக கேரள மாநில எல்லையில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இ்ங்கு கழிப்பறை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் திறந்த வெளிப்பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமன், பாட்டவயல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 1:09 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#50343

சாலையில் ஓடும் குடிநீர்

தண்ணீர்

கோவை சாஸ்திரி ரோடு வ.உ.சி. காலனி அருகே சாலையோர குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால் குடிநீர் வீணாக சாலையில் பெருக்ெகடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக சாலை சேதமடைவதோடு வாகன விபத்துகளும் நடக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கும் சீராக குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். லிங்கம், கோவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 6:39 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#50108

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

கோவை ராமநாதபுரம் சிக்னல் பகுதியில் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அங்கு சாலை பணியும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு பணிகளை விரைந்து முடித்து, சாலையை சீரமைக்க வேண்டும். ஸ்ரீகனித், ராமநாதபுரம்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 6:38 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#50107

நோய் பரவும் அபாயம்

குப்பை

கோவை வடமதுரை அருகே பழனிகவுண்டன்புதூர் பன்னிமடை சாலையோரத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. அதனருகில் கால்வாயும் செல்கிறது. அந்த கால்வாயிலும் குப்பைகளை கொட்டுகின்றனர். இதன் அருகில் பள்ளிக்கூடம் உள்ளது. இதனால் அந்த வழியாக சென்று வரும் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. மேலும் அவர்கள் தினமும் மூக்கை மூடிக்கொண்டு செல்வதை காண முடிகிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். குணா, வடமதுரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 6:37 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#50106

உடைந்து கிடக்கும் சாக்கடை மூடிகள்

கழிவுநீர்

கோவை டவுன்ஹால் பெரியகடை வீதியில் பாதாள சாக்கடை மூடி ஆங்காங்கே உடைந்து கிடக்கிறது. அதை மூட பெரிய அளவிலான கற்களை போட்டு வைத்து உள்ளனர். அதையும் சரியாக வைப்பது இல்லை. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்வோரும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். அதுவும் இரவில் அதிகப்படியான விபத்துகள் நடைபெறுகின்றன. எனவே அந்த பகுதியில் பாதாள சாக்கடை மூடிகளை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும். குமரேசன், கோவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 6:36 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#50105

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

கோவைசவுரிபாளையம் இந்திரா நகரில் சாக்கடை கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் சாக்கடை கழிவுநீர் செல்ல முடியாமல் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. மேலும் அந்த குப்பைகள் மாதக்கணக்கில் அகற்றப்படுவதும் இல்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதுடன் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்ட தடை விதிப்பதோடு, எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜா, சவுரிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick