Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Nov 2024 12:37 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#51570

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

கோவை கலெக்டர் அலுவலக பின்புறத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. நீண்ட நாட்கள் ஆகியும் அந்த குப்பைகள் அகற்றப்படவில்லை. இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் தற்போது மழை பெய்து வருவதால், அதில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 12:34 PM GMT
Mr.V.Ramachandran | குன்னூர்
#51403

சாலை பயன்பாட்டுக்கு வருமா?

சாலை

மஞ்சூர் அருகே உள்ள கிண்ணக்கொரை பகுதி தமிழக-கேரள எல்லையில் உள்ளது. இந்த பகுதியில் இருந்து கெத்தை பகுதிக்கு செல்ல சாலை இருந்தது. அந்த சாலை தொடர்ந்து பராமரிப்பில் இல்லாததால் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றது. அத்துடன் செடி, கொடிகள் வளர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல அடர்ந்த வனப்பகுதியை பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை பராமரித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 12:33 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#51402

திறக்கப்படாத நகர்ப்புற மையம்

மற்றவை

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 87-வது வார்டு திருமூர்த்தி நகரில் நகர்ப்புற நல வாழ்வு மையம் உள்ளது. இந்த மையம் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை. எனவே விரைவில் இந்த மையத்தை திறந்து, அந்த பகுதி மக்களின் நலன் காக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 12:32 PM GMT
Mr.V.Ramachandran | கவுண்டம்பாளையம்
#51401

சுகாதார சீர்கேடு

குப்பை

கோவை அருகே குருடம்பாளையம் ஊராட்சி பன்னிமடை சாலையோரத்தில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றிக்கு கீழ் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் மின்மாற்றியில் ஏதேனும் பணியாற்ற வரும் மின் ஊழியர்கள் குப்ைபகள் கிடப்பதால் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 12:32 PM GMT
Mr.V.Ramachandran | சிங்காநல்லூர்
#51399

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கோவை சிங்காநல்லூர் நந்தா நகர் சாலை, டெக்ஸ்டூல் லே அவுட் தெரு உள்ளிட்ட இடங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை அந்த வழியாக நடந்து செல்வோரையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்தி சென்று கடித்து வருகின்றன. இதனால் வெளியே நடமாடவே அச்சமாக உள்ளது. எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 12:31 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#51398

கடும் துர்நாற்றம்

கழிவுநீர்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லியில் அரசு உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஒட்டி கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் உடைந்து கிடக்கிறது. அத்துடன் அதற்கு மேல் மூடியும் இல்லை. இதனால் கழிவுநீர் வழிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. எனவே அந்த கழிவுநீர் கால்வாயை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 12:31 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#51397

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 3-வது வார்டு அஞ்சுகம் நகரில் தண்ணீர் தொட்டி அருகே சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு மீண்டும் குப்பைகள் கொட்டாமல் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 12:30 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#51396

ஒளிராத ெதருவிளக்குகள்

மின்சாரம்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பந்தப்பிளா பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இது வனப்பகுதியையொட்டி உள்ள பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் அவ்வப்போது காணப்படுகிறது. இங்குள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து நீண்ட நாட்களாக ஒளிராமல் கிடக்கின்றன. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே அங்கு புதிய தெருவிளக்குகளை பொருத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 12:30 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#51395

பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?

மற்றவை

கோவை அரசு ஆஸ்பத்திரியின் முன்பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகில் பட்டுப்போன நிலையில் மரம் ஒன்று நிற்கிறது. இந்த மரம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் இருக்கிறது. தற்போது கோவையில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மரம் சாய்ந்து விழ அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே அசம்பாவித சம்பவம் நிகழும் முன், அந்த மரத்தை உடனடியாக வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 11:58 AM GMT
Mr.V.Ramachandran | கவுண்டம்பாளையம்
#51210

தேங்கும் தண்ணீரால் அவதி

தண்ணீர்

கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி புதுப்பாளையம் பகுதியில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை நிரம்பி கழிவுநீருடன் கலந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் சாலையில் தேங்கி வருகிறது. இதனால் சாலை பழுதாகி வருகிறது. மேலும் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு கழிவுநீர் கலப்பதை தடுப்பதோடு தண்ணீர் மாற்று வழியில் வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 11:57 AM GMT
Mr.V.Ramachandran | தொண்டாமுத்தூர்
#51209

பஸ் சேவை தொடங்கப்படுமா?

போக்குவரத்து

வடவள்ளி அண்ணா நகரில் இருந்து கவுண்டம்பாளையம் வழியாக குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதிக்கு அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டது. இந்த பஸ் சேவை உக்கடம் ஆத்துபாலம் மேம்பால பணி நடைபெற்றதால் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது பணி முடிந்து மேம்பாலம் திறக்கப்பட்டுவிட்டது. ஆனால் பஸ் சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை. எனவே நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் தொடங்க அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உரிய நவடடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 11:57 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#51208

வெட்டப்பட்ட மரக்கிளைகளால் இடையூறு

போக்குவரத்து

கோவை ரத்தினபுரி அருள் நகர் காந்திஜி சாைலயில் மின் பராமரிப்பு பணியையொட்டி மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. அந்த மரக்கிளைகளை சாலையில் அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். நீண்ட் நாட்கள் ஆகியும் அகற்றவில்லை. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை. இதன் காரணமாக அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அந்த மரக்கிளைகளை உடடினயாக அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick